Sep 12

1:30 PM 0 comments
உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசும், மக்களும் மதித்து நடக்க வேண்டும். போராட்டம் நடத்துவதை காரணமாக காட்டி, காவிரி நீரை நிறுத்த உத்தரவிட முடியாது. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வரும் 20-ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்” என்று கூறி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 20-ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.







சென்னை அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு பெங்களூரில் நடக்கும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்களால் பாதுகப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.


இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடந்த நீயூஸ் ஹவர் நிகழ்ச்சி பல்வேறு நுட்பமான தகவல்களைத் தந்தது.

1. 600க்கும் மேற்பட்ட குண்டர்கள், ரவுடிகள் வெள்ளிக்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2. வன்முறை நிகழும் என்று உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அறிக்கையையும் மீறி விடுதலை செய்ப்பட்ட வன்முறையாளர்களே பிறகு நடந்த வன்முறைகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

3. கர்நாடக ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேசும்போது, கலவரம் நிகழாமல் இருக்க தமிழக முதல்வர் பேச்சுவார்த்தக்கு வரவேண்டும் என்றவாறு பேசுகிறார்கள். கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் அதைப் பரவவிட்டது, பேச்சுவார்த்தையின் மூலம் நீதிமன்றத் தீர்ப்பை முறியடித்துவிடாமல் என்ற திட்டம் கர்நாடகத்திடம் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.




Cauvery water war: Schools, metro services closed, vehicles set on fire; Sec 144 imposed in Bengaluru


Massive violence erupts as SC directs Karnataka to release Cauvery water to Tamil Nadu; one dead




0 comments:

Post a Comment