தமிழக ஓட்டுனர் ஒருவர் சில நாட்களுக்கு முன் குண்டர்களால் தாக்கப்பட்டார். அவரை அடையாளம் கண்டு அவருக்கு ஆறுதல் கூறியும், தங்களாலான பொருளுதவியை வருமையில் இருக்கும் அவருக்கு வழங்கி தமிழர்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் பந்த் மற்றும் ஆர்ப்பட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் இரு மாநில அரசுகளையும் இன்று கண்டித்தது. தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடைபெறாத நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தையும் சேர்த்து கண்டித்ததை சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.
நாளை தமிழகம் தழுவிய கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், ரயில் மறியலுக்கு அரசியல் கட்சிகள், விவசாயிகள், இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
ஆளும் அ.தி.மு.க கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கடையடைப்பில் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை கடையடைப்பின் போது வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழகக் காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது.
0 comments:
Post a Comment