Sept 14

1:33 PM 0 comments

கர்நாடகத்தில் இன்றும் பதட்டம் தனியாமல் தமிழர்கள் அச்சத்துடனேயே இருந்தனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும், வாகனங்கள் தாக்கப்பட்டவண்ணம் இருந்தது.






தமிழகக் கடைகளில் கன்னடத்தவர்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வழக்கம்போல் பொருட்களை வாங்கிச் செல்வதை கன்னியா குமரியில் கடை வைத்திருக்கும் பசுமை சாகுல் என்னும் நபர் முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்காதவர்கள் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.


தமிழகத்தின் நிலையைச் சொல்லும் இன்னொரு நிகழ்வாக, திண்டுக்கல் அருகே கர்நாடக பதிவெண்கொண்ட வாகனத்தில் கன்னடர்கள் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதையும், தமிழர்கள் அவர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவும் சம்பவமும் சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment