Sept 13

1:31 PM 0 comments

கர்நாடகத்தில் நேற்று தமிழர்கள் மீதும், தமிழர்களின் சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்ட வெறியாட்டம் இன்றைய தமிழக நாளிதழ்களை நிறைத்திருந்தது.


தமிழகத்தின் இடைக்கால நிவாரண மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையின் பின் தமிழகத்திற்கு கூடுதலாக மூன்று நாட்களுக்கு 12000 கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. 
சென்னையில் கர்நாடக வாகனங்கள், சொத்துக்கள் தாக்கப்படாமல் தடுக்க காவல் வாகனங்கள் ரோந்து வந்த செய்தியை நாளிதழ்கள் பதிவு செய்திருக்கிறது.

கர்நாடக முதல்வர் தமிழ முதல்வருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்த ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தில் வன்முறைகள் அதிகம் நடைபெறாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும், சிறிய சம்பங்கள் இரண்டைத் தவிர தமிழகம் அமைதியாகவே இருப்பதாகவும், மாறாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் சொத்துக்கள் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழக முதல்வரின் கடிதம் பத்திரிக்கைகளுக்கு வெளியிடப்பட்டது.

கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டது குறித்த செய்திகள் இன்றைய நாளிதழ்களில் குறிக்கப்பட்டுள்ளது.











தினமலர் பெங்களூர் பதிப்பு வெளியிடப்படவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனப்(KPN/SRS) பேருந்துகள் 40 க்கும் மேற்பட்டவை கர்நாடகத்தில் தீக்கிரையாக்கப்பட்டன.


தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பாராவுந்து கர்நாடகாவில் தீவைக்கப்பட்டது.




கர்நாடகத்தில் 200 தமிழக வாகனங்கள் எரிப்பு. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம்.


தமிழகத்தைக் கண்டித்து மீண்டும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு





நட்சத்திர ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சென்னையில் 4 பேர் கைது.


கர்நாடக தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விளக்கம்







தமிழக பதிவெண் உள்ள வாகனங்களுக்கு தடை


தமிழ் இந்துவின் கலவரம் பற்றிய தொகுப்பு.








0 comments:

Post a Comment